இன்னைக்கு இடி, மின்னல் தண்டெர் ஸ்டார்ம் ஓய்வின் நகைச்சுவை 248

இன்னைக்கு இடி, மின்னல் தண்டெர் ஸ்டார்ம்
ஓய்வின் நகைச்சுவை: 248

மனைவி: (பாடுகிறார்) ஓடி விளையாடு பாப்பா. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. ஓடி விளையாடு பாப்பா! ஏ….ய்… பா….ப்…பா!!

கணவன்: ஏண்டி!! பாடுறதுக்கு வேறு பாட்டே கிடைக்கலையா? எதுனாலும் டைரக்டா சொல்லு

மனைவி: சொல்றதுக்கு நேக்கு என்ன பயம்? பேரப்பிள்ளையே பார்த்து பாடினா தாத்தாவிற்கு ஏன் குத்தறது? அதுதான் பேஸ்புக், வாட்ஸாப்ப்னு 24 மணி நேரமும் வெரி இம்போர்ட்டண்ட் ஜப்னா பார்த்துண்டிருக்கேள் உங்களே சொல்ல முடியுமா?

கணவன்: உன்னே சொல்லி குத்தமில்லைடி!! இன்னைக்கு என் ராசி பலன்லே ‘இடி, மின்னல் தண்டெர் ஸ்டார்ம்னு’ கரெக்ட்டா தான் போட்டி- ருக்கான்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (14-Nov-19, 2:36 pm)
பார்வை : 72

மேலே