உள்ளங் கனிந்தறம் செய்து உய்கவே – நன்னெறி 30

நேரிசை வெண்பா

கொள்ளும் கொடும்கூற்றம் கொள்வான் குறுகுதல்முன்
உள்ளங் கனிந்தறம்செய்(து) உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு. 30 - நன்னெறி

பொருளுரை:

வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டு வைக்காதவர் பெருக்கெடுத்து வெள்ளம் வரும்போது என்ன செய்வார் கூறு.

அது போலவே உயிரைக் கொள்ளும் யமன் வருவதற்கு முன்பே மனங்கனிந்து அறம் செய்து பிழைத்துக் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 5:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

மேலே