சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர் மேவுநெறி - நீதி வெண்பா 25

இன்னிசை வெண்பா

ஞானம்ஆ சாரம் நயவார் இடைப்புகழும்
ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியிற்
பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்
மேவுநெறி யென்றே விடு. 25 நீதி வெண்பா

பொருளுரை:

ஞானத்தையும், ஆசாரத்தையும் விரும்பாதவரிடத்தில் புகழப்படுகின்ற நான்கு வேதங்களும், மற்றை ஞான சாத்திரங்களும் இருக்கும் முறைமையை எது போலும் என்று சொல்லப் போனால், பாவம் மிகுந்த நீசர்களுடைய பாத்திரத்தில் கங்கை தீர்த்தம் இருத்தல் போலும் என்றே துணிந்து விட்டு விடுவாயாக என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-19, 9:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே