குழந்தைகள் தின கவிதை

குறு நகை புரிவர், குறும்பு பல செய்வர்
ஒலி எழுப்புவர், ஓடி விளையாடுவர்
கேள்விக் கணைகள் தொடுப்பர்
கோபத் தணல் மூட்டுவர்
கம்பை எடுத்து அடிக்கும் முன்னே
கண் இமைக்கும் நேரத்தில் ஓடி விடுவர்
மழலை மொழி பேசி மயக்குவர்
மலைக்க வைக்கும் செயல்கள் செய்வர்
கண்ணீர் ஆயுதத்தால்
கல் நெஞ்சையும் கரையச் செய்வர்
அகத்தின் அழகு முகத்தில் தெரிய
கள்ளங் கபடமின்றி சிரித்து மகிழ்வர்
நேற்று நடந்ததை நினைப்பதும் இல்லை
நாளை பற்றிய கவலையும் இல்லை
இன்று மட்டுமே அவரது உலகம்
இன்பம் ஒன்றே அவரது லட்சியம்
தாய் உண்டு பாலூட்ட
தந்தை உண்டு தாலாட்ட
தாத்தாவும், பாட்டியும் உண்டு கதை சொல்லி தூங்க வைக்க
இமைப்பொழுதும் நீங்கா நினைவுகள் தரும் அவர்கள்
குழந்தைகள் எனும் கவலை தீர்க்கும் தெய்வங்கள்

எழுதியவர் : பாரதிகேசன் (15-Nov-19, 8:43 am)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 66

மேலே