வண்ணத்து பூச்சி

வானவில் பெற்றெடுத்த
வண்ண பூச்சியோ
வானத்திலிருந்து வந்த
வர்ண பூச்சியோ
வண்ண சிறகுகளால்
என்னை பறக்க வைக்கிறாய்
கருமையில் கலவை கலந்து
இருட்டினை மறைத்து வைக்கிறாய்

இத்தனை வர்ணங்கள் உன்மீது
யார் பூசி வைத்ததோ
ஒவ்வொன்றாய் திருட நினைக்கிறன்
உன் அழகு என்னை ஈர்க்குதோ

ஒருமுறை வந்து அமர்ந்துவிடு
என் நெஞ்சத்தில்
பல எண்ணங்களில் உன் வர்ணங்களும்
கலக்கட்டும்

BY ABCK

எழுதியவர் : (15-Nov-19, 6:28 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : vannaththu poochi
பார்வை : 230

மேலே