மயங்கு

ஏனுங்க அஞ்சு வருசம் தவமிருந்து நாம போகாத கோயில் குளம்இல்ல. ராமேசுவரத்திலிருந்து காசிவரைக்கும் புனிதப் பயணம் போனோம். அந்த கடவுள் கிருபையால எனக்கு அழகான பெண் கொழந்தை பொறந்து மூணு நாளு ஆகுது.
@@@@@@
தீ சொல்லறது சரிதான் கண்ணம்மா. கொழந்தையைப் பாத்த உடனே அதோட "முகம் 'முழு நிலவு போல அழகா இருக்குது"ன்னு நீ சொன்னது ஞாபகம் இருக்குதா உனக்கு?
@@#@##@
ஆமாங்க. நாஞ் சொன்னது உண்மைதான். அதில ஒண்ணும் சந்தேகம் இல்லீங்க.
@@@@@
அதனாலதான் 'நிலா:வைக் குறிக்கிற ஒரு இந்திப் பேரை நம்ம பாப்பாவுக்காக கண்டுபிடிச்சேன். தென்னிந்தியாவில யாரும் அவுங்க பொண்ணுக்கு இந்தப் பேரை வச்சிருக்கமாட்டாங்க.
@@@@@@
அந்தப் பேரைச் சீக்கிரம் சொல்லுங்க.
@@########
நம்ம பாப்பா பேரு 'மயங்கி'.
@#@@@@@@@
ஏனுங்க இந்தப் பேரைக் கேட்டா நம்ம சனங்க கிண்டல் பண்ணமாட்டாங்களா?
அடி போடி பைத்தியகாரி. நம்ம தமிழ் மக்கள்கிட்ட கடுமையான போட்டி. இந்திப் பேரை பிள்ளைங்களுக்கு வைக்கிறதிலே லெறித்தனமா இருக்கறாங்க. நாமளும் தமிழர்கள் தானே!
@@@#@#@
இருந்தாலும் 'மயங்கு'ன்னு பேரு வைக்கிறது.......
@@@@@@
ஒண்ணும் தப்பில்ல கண்ணம்மா..'"மயங்கு' இந்திப் பேரு"ன்னு சொன்னாப் போதும். நூத்துக்கு நூறு சனங்க "'மயங்கி'. அருமையான பேரு. ஸ்வீட் நேம்"ன்னு பாராட்டுவாங்க.
@@@@@@
நீங்க சொல்லறதும் சரிதானுங்க. "இல்லடி மயங்குச் செல்லம்".
■■◆◆◆◆◆◆■◆◆◆■■■■■■■■■■■■■■
Mayanki = Lord Chandra (Moon)

எழுதியவர் : மலர் (16-Nov-19, 4:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 110

மேலே