காதல்

அவள் கண்களிரண்டும்
மதுவேந்தும் மலர்கள்
மலர் விழியல்லவோ அவள்
என் மனதை சுண்டி இழுக்க ,
அவள் இதழ்களோ தேன் கிண்ணம்
என் இதழ்கள் அந்த தேன் சுவைக்க நாட
அதோ அதோ வருகிறாள் அவள்
அரங்கில் ஆட வந்த நாட்டிய பாவையைப்போல்
அலையும் விழி இரண்டும்
துடிக்கும் புன்னகை இதழ்களோடு
ஜதி சேர்க்க ஆடி வருகிறாள்
என் மனம் அவள் காதல் நாடி ஆட

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (17-Nov-19, 9:10 am)
Tanglish : kaadhal
பார்வை : 235

மேலே