காதல் சொல்ல வந்தேன் -18

காதல் சொல்ல வந்தேன்-18

உன்னை பார்க்கும் முன்னே நிறைய பேசதான் தோணுது

உன்னை பார்த்தப்பின்னே எல்லாமே
மறந்தே போகுது

நீ போனபிறகு ஒவ்வொன்றாய் மீண்டும்
வரிசையா நிக்குது

சரி நாளைக்கு கேட்டுக்குவோம் என்ற
சமாதானம் தொடருது

உனக்கு மட்டும் ஒவ்வொருநாளும் புதுசாபேச எதாவது இருக்குது

எப்படி முடிகிறது என்ற ஆச்சர்யம் எனக்குள் வருகுது

உன் அசைவுகள் ஒவ்வொன்றும் என்னை ஈர்க்குது

அதனால் தானோ உன்னை எனக்கு
ரொம்ப பிடிக்குது

எழுதியவர் : நா.சேகர் (17-Nov-19, 9:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 201

மேலே