ரோஜா இதழ்கள் சிந்திய முத்துக்கள்

கடந்து சென்றாள் அருகினில்
நடந்து சென்றேன் வீதியில்
படர்ந்தது நெஞ்சினில் பூமணம்
சுடரும் ஒளியில் அழகாய்த் தெரியும்
பூரண நிலவாக அந்தக் கூட்டத்தின்
நடுவில் ஒளிர்ந்தது அவள் முகம்
தங்கப் பாளங்கள் பெயர்த்துத் தைத்து
பொன்தூவல் வார்த்துச் செதுக்கிய
பவழச் சிலை கண்முன்னே நின்றது
மெய்மறந்து கால்கள் இடறிய என்நிலை கண்டு
புன்முறுவல் பூபூத்த அந்தப் பொன் முகத்தில்
சிரிப்புப் பழம் முற்றிக் கனிந்தது
ரோஜா இதழ்கள் முத்துக்களை நிலத்தில்
அங்குமிங்கும் சிந்திக் கொண்டிருந்தன
உடனே தோன்றிய உதறல்
நிலை கண்டு என் நெஞ்சு பதறியது
அவள் கிடைக்காவிடில் தனது
உயிரை மாய்த்து விடுமோ என் காதல்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (18-Nov-19, 1:28 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 211

மேலே