இடம் மாறிய கணித ஆசிரியர்

காலத்தின் கணக்குகளில்
கணித ஆசிரியற்கும் மட்டும் விதி விலக்கா
கழித்தலோடு எங்கள் கவலைகள் கூட்டலாகிறது
உங்களின் பிரிவால்

இனி கைவிட்டு கணக்கு பாடம்
கற்கும் போது
ஆறாம் விரலாய் உங்களை
எங்கள் நெஞ்சம் கூட்டிடுமே

கரும் பலகையில் உள்ள பூஜ்யத்தில் எல்லாம்
உங்கள் முகங்களே
அழிக்க மறுத்து அணைக்க நினைக்கிறன்

சிந்திக்க வைக்கும் கணித பாடத்தில்
நீங்கள் போன அரை நாட்களில் 600 - தடவை
உங்கள் பெயரை எழுதி பார்த்து விட்டேன்

மறக்க மாட்டோம் கணிதத்தையும்
நெஞ்சில் பதிந்த அன்பு கனிமத்தையும்.

BY ABCK

எழுதியவர் : (18-Nov-19, 9:50 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 43

மேலே