ஓட்டம் எடுத்து பிடித்தாயோ

ஓட்டம் எடுத்து பிடித்தாயோ
இந்த பரிசினை
பாதத்தின் காயங்கள் எல்லாம்
பளிச்சென்று பரிசாய் மின்னுதே

விடாத முயற்சி
விடுமா இந்த வெற்றியை
நீ சுமந்த பதக்கம்தான்
இனி சுமைதாங்கும் உன் புகழினை

உண்மையாய் போராடினால்
உலகம் உன் பெயர்ச்சொல்லும்
ஒரு போதும் நிற்காதே
வெற்றியை தேடி ஓடு

புது பாதை பிறக்கும்
அதில் உன் பெயர்தான்
புதியதாய் நிற்கும்.

BY ABCK

எழுதியவர் : (18-Nov-19, 9:51 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 67

மேலே