வாரி என்னைப் பூசேண்டி

குப்பென்ற மழையொன்று
குதிர் குதிராய் கொட்டியது
கொட்டிய மழையினாலே - உன்
எழில் உடல் நனைந்ததடி

அழகு உடல் குளிரினாலே
கடகடவென நடுங்கியது
நடு நடுங்கும் உன்னைப் பார்த்து
என் இதயம் கொஞ்சம் நின்றதடி

அணைத்துக் கொண்டு
அனல் தரவே ஆயிரமாய் ஆசையுண்டு
அப்பழுக்கற்ற காதலாலே
அல்லல்படுறேன் உனைக்கண்டு

கொள்ளை அழகு கொண்டவளே
குழந்தைப் போலே சிரிப்பவளே
நெல்லை அல்வா பேச்சினாலே
நித்தம் என்னை உருக்கினாயே

வாழைத்தண்டு கைகளினால்
வாரி என்னைப் பூசிக்கொள்
வருங்காலம் நம்மைப் பார்த்து
வண் தமிழால் வாழ்த்தட்டும்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Nov-19, 9:42 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 101

மேலே