இனித்தது எனக்குத்தானே

இனித்தது எனக்குத்தானே
===============================================ருத்ரா.

சிற்பியால் செதுக்க முடியவில்லை
சிற்பமாக‌
உன் நினைவுச்சிப்பத்தை.
ஓவியம் தீட்டும்
புருசும் தோற்றது
உன் இமையோர பூமயிர்
வரிசையின் முன்னே.
உன் விழி பற்றி
கவிதை எழுதப்புகுந்தவர்
அந்த சுழியில் வழி இழந்து
நிலை குலைந்தனர்.
அசட்டுக்காதலன் நான்
நகம் வெட்டிய பின்
நீ வீசிய "மிச்சப்பிறைகளை"
பத்திரமாக வைத்தேன்
வானத்தில் நிலாப்பிறைகளாய்.
நகம் கடித்து அமர்ந்து
நினைவில் மூழ்கியிருப்பாய்.
அது
என்னைப்பற்றித்தான்
என்று எண்ணி நான்
மிக மிக நாணம் மிகக்கொண்டேன்.
அப்படி
கடித்ததே போதும் கண்ணே எனை.
இனித்தது எனக்குத்தானே.

=========================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (19-Nov-19, 11:22 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 201

மேலே