காதலில்

யாருமற்ற மணல்வெளியில்
நடந்தேன்
சிதறிடும் நதியலையில்
நனைந்தேன்
நடந்திடும் நத்தைக்கூட்டை
ரசித்தேன்
நாணலின்நிழலடியில்
கிடந்தேன்
ஆற்றங்கரைபோல எந்தன்
தோழன்யாரும்
இருந்ததில்லை
நண்டுநத்தை நாரைகளும்
பேசும்
மொழிபோல் ஏதுமில்லை..
நீர்துளிகள் தெளிக்கையிலே
வந்தசுகம்
விளித்திட வார்த்தையுண்டோ..
உச்சிமுதல்பாதம் வரை
நனைந்தால்
உள்ளம்துள்ளும் காதலன்றோ..
ஆழ்மனதின் தேடலிது
அன்பே
நீ அருகில்நடந்து வந்தால்
ஆற்றுமணல் அனைத்திலுமே
நம்காதல் விதைத்திடுவேன்..

எழுதியவர் : Rafiq (20-Nov-19, 7:06 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 217

மேலே