அம்மையப்பனாய்

அன்னை தந்தை சேர்ந்தேதான்
அண்ணன் உருவம் ஆனதுவோ,
அன்பைக் கொடுப்பதில் அன்னையாக
ஆசையாய் வளர்ப்பதில் தந்தையாக,
என்றும் காப்பான் நன்றாக
என்னும் உறுதி தங்கைக்கே,
இன்னும் என்ன பயமென்றே
இறுக்கிப் பிடித்தாள் அண்ணனையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Nov-19, 7:58 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 42

மேலே