அவள்

நிலவின் குளிரெல்லாம்
இவள் முகத்தில்
மண்ணில் உலாவும்
நிலவானாள் இவள்
பாவம் நிலவு
ஒளியும் இழந்து
குளிரும் இழந்ததுபோல்
நீலவானில் உலவவும்
மறந்ததுபோல் எங்கோ
கருமேக உறைக்கு பின்
மறைந்துபோனது மங்கி
மங்கியதோர் இரவு
அதில் ஒளி பரப்ப
வந்த நிலவாய்
வந்தாள் என்னவள்
என் மனம் குளிர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Nov-19, 1:08 pm)
Tanglish : aval
பார்வை : 183

மேலே