அவளைத்தேடி அவன்

ஒரே ஒரு பார்வையால்
என் இதயத்தை திருடிவிட்டாய்
என்னவளானாய் எனக்கு
திருடிபோல் இன்னும் காணாது
எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறாய்
என்ன கண்ணாமூச்சி ஆட்டம் ஆடவா .....
எப்படியோ , ஒன்றுமட்டும்
சொல்வேன் நான் நீ இல்லாது
ஒரு க்ஷணம் கூட இருந்திட முடியலையே
இந்த பாவி மனதிற்கு
உன்னைப் பார்க்கமுடியா இந்த
கண்களுக்கு இனி பார்வை இருந்துதான்
என்ன பயன் நீயே சொல்வாய்
என் அன்பே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Nov-19, 8:14 pm)
பார்வை : 286

மேலே