குறுஞ் செய்திக்காக

உறங்காத விழிகளில்
ஊமையின் கனவுகள் போல்
கண்கள் மூடாது தேடலில் அவள்
நெஞ்சில் நெருங்கிவிட்ட அவன் எண்ணம்.
ஏன்/ இவள் மட்டும் தேடலில்
புரிகின்ற அவள் நினைவுகளில்
அவன் எண்ணம் கானல் நீர் போல் தோன்றுகிறது
காத்திருக்கின்றாள் குறுஞ் செய்திக்காக ....

அவனும்தான் உறங்கவில்லை
என்னென்னமோ காட்சிகளில் அவன் பார்வை
ஆனாலும் எண்ணம் மட்டும் அவளிடத்தில்
அவள் வருவாளா/ என இவனும் ,
அவன் வருவானா/ என அவளும்
எழுதுகின்றான் அவன் எண்ணங்களை
அவள் முகவரியில் அவன் காகிதம்
அவள் தரும் பதிலுக்காக
இவன் தபால்காரனை நோக்கியே,,,

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Nov-19, 11:13 am)
பார்வை : 176

மேலே