நிலைக்கண்ணாடி

நிலைக்கண்ணாடி முன் நான்
புதியதாய் செய்துகொண்ட முடியலங்காரம்
குறுந்தாடி...... என் அழகை ரசிக்கையில்
என் உள் மனது கொஞ்சம்
பேசுவதுபோல் இருந்தது ....பேசியது
இப்படி, ' இந்த கலியுகத்தில் மனிதரில்
பலர் உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் ......நல்ல நண்பனாய், நல்ல
கணவனாய், நல்ல மனைவியாய் ...என்று
இப்படி... நல்ல கணவன்போல் நடித்து
மனைவியை ஏமாற்றி ....வேறோர் பெண்ணுடன்
கள்ள உறவு ...... கணவனுக்கு தெரியாது
'கள்ள உறவு' கொள்ளும் பெண், நல்லவன்போல்
நடித்து நயவஞ்சகம் கொண்டு நண்பனை
ஏமாற்றல் ....இப்படி இத்தர மனிதர்
நிலைக்கண்ணாடியில் பார்க்க தங்கள்
பிம்பம் தெரியாது தங்கள் உள் மனதில்
ஒளித்து வைத்த பிம்பம் கண்ணாடியில்
தெரிந்தால் ....... என்ன ஆகும் ...
கள்ள காதலி/ காதலன் இப்படி இந்த
பிம்பங்கள்.......
அன்று அர்ஜுனன் மகன் அபிமன்யு
பெற்ற வரம்போல்...'

இப்போது மீண்டும் நிலைக்கண்ணாடியில்
என்னைப் பார்த்தேன்.... என் மனதில்
என்னவள் தவிர வேறு யாரும் இல்லை
நான் அறிவேன்..... அவள்தான் இப்போது
பிம்பமாய்க் கண்ணாடியில் ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Nov-19, 1:34 pm)
பார்வை : 117

மேலே