என்னவள்

இவள் முகம் தாமரையா
இல்லை தாமரைதான் இவள் முகமோ
இவள் விழிகள் கயலா
இல்லை கையில்தான் இவள் விழியா
பிறை இவள் நுதலா
இல்லை நுதல் பிறையா
பவளம் இவள் இதழா
இல்லை இவள் இதழ்கள் பவளமோ
பவளக்கொடி இவள் இடையா
இல்லை இவள் சிற்றிடை பவளக்கொடியா

இப்படி இயற்கையும் இவளும்......
இல்லை, இவள் அங்கங்கள் அழகு ஒவ்வொன்றும்
இயற்கையுடன் பரிவர்த்தனையில் .....அதனால்
இவள் இயற்கை ஈன்றெடுத்த
இனிய அழகு மகள்
என்னவளானால் இவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Nov-19, 8:17 pm)
Tanglish : ennaval
பார்வை : 365

மேலே