தலை முடி நடவு

தலைமுடி நடவு ( வெண்பா )

பெண்ணொருவள் தன்கணவன் வீரப் புகழ்பேசி
தன்மானம் காத்தாள் மறவச்சி -- இன்னு
மவள்யிப்பேச் சைமூவேந் தர்முன்னே சொல்ல
அவர்பயந்தொ ளிந்தாராம் ஓடி (ஆக்கியோன்)


சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த வடிச்சேற்றில் -- மானபிரான்
மாவேந்த னேகம்ப வாணன் பறித்துநட்டான்
மூவேந்தர் தங்கண் முடி (சரித்திரம் )



ஆசிரயப்பா

வெட்கமும் வேதனையும் கொள்கிறேன் புலவரே
இமைக்குமுன் கற்பனையில் நீந்தல் விடுத்து
இந்தியிந்தி யெனநீ நடுங்குவ தெதற்கு
பேச்சுக் குப்பேச்சு பெரியார் என்கிறாய்
யேசுவ தேன்நீ எவரையும் எதைக்கற்றாய்
கற்றாயோக் கலம்பகம் மட்டும் தமிழில்
விற்றாயோ உன்புலமை பெரியார் கட்சிக்கு.
கற்றது நடுவண் எதிர்ப்பும் மற்றதும்
நல்லதமிழ் படைக்கா விட்டாய்
நாதாரிப் பின்பற்றி நாட்டைக் கெடுத்தாயே


ஏகம்பவாணன் பெரும் செல்வந்தர் . கம்பனிடம் பயின்றவர் தன்னை வளர்த்த ஏவலாளியின் முதல் எழுத்தையும், கம்பனின் முதல் எழுத்தையும் சேர்த்து ஏகம்பனுடன் வாணன் என்ற தன் பெயரையும் சேர்த்துக்கொண்டவர் . அன்னாரின் புகழைக் கேட்டு மூவேந்தரும் அவருடைய வீட்டிற்குவந்து விசாரித்துள்ளனர். ஆனால் அவரைக் காணவில்லை . அவரின் மனைவி அவர் கழனிக்குப் போயுள்ளார் என்று பதில் சொல்ல. உடனே அரசர்கள் முதலியார் முடிநடவு செய்யப் போயுள்ளாரா ? என்று கிண்டல்
அடித்துள்ளார்கள். அதற்கம்மணி கோபமாகவும் தைரியமாகவும் பதிலை இவ்வாறு கூறியுள்ளார்.

ஆம் என்னுடையக் கணவன் ஏகம்பவாணன் என்பவன், மூவேந்தர் படைகள் மொத்தமாய்ச் சேர்த்துக் கொன்று பிணங்களைத் தழை உரமெனக் கருதி நிலத்தில் பரப்பி அங்குத் தேங்கியக் குருதியை சுரக்கவிட்டுப் பிறகு யானைகளின் கால்களால் மிதியுரச்செய்து குருதிச் சேராக்கிய மாவேந்தன் ஏகம்பவாணன் மூவேந் தர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்களின் தலைக் கிரீடங்களை சேடையிலநட்டுக்கொண்டிருக்கிறான் என்றுபதில்கொடுத்தாளாம்.

எழுதியவர் : பழனி ராஜன் (23-Nov-19, 1:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 164

மேலே