மௌனியின் தவிப்பு

ஆழ்கடல் வாழ்வமைப்பில்
அதிர்வலைகளால் தடுமாறினேன்.

அதிரடிகளின் ஆற்றாமையால்
அனைத்தையும் உள்வாங்கினேன்.

உணர்வுகளின் இறுக்கமாய்
உறைந்தேன் கரைந்தேன்

பீனிக்ஸ் என்னுள் பாய்ந்ததோ
பீறிட்டு கிளர்ந்தெழவே
மௌனம் கலைகிறதோ
மரண தவம் கலைகிறதோ

தவிப்பெல்லாம் தளரச்செய்ய
துடிப்பெல்லாம் துவண்டு விழ
தீக்குள்ளிருந்து ஜுவாலையாய்
எரிதணலாய் நான், யாரையும்
இனி எதிர் கொள்வேன்,

மௌனம் மரணமல்ல,
மறுதலிக்க
நானும் யோகியல்ல..
மெல்ல சாகிறது என் மௌனம்,
மேலெழுகிறது என் தருணம்
வெற்றி என்பது வெளிச்சத்தின் விடியல்
வேதனை என்பதில் வற்றிய குள வரிகள்....!!

எழுதியவர் : செல்வமணி (23-Nov-19, 3:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 157

மேலே