வா கிளியே வா

கண்களில் மிதக்கிறாய்
கண்தூக்கம் கெடுக்கிறாய்

நினைவுகள் எங்கிலும்

நீயே தான் கிடக்கிறாய்

மறக்கத் தான் நினைக்கிறேன்
முயன்று நான் தோற்கிறேன்
நாடி நாடி வருகிறேன்
ஓடி ஓடி விலகுகிறாயே ஏன் ?

பாடித் திரியும் மைனாக்களே
என் தேடுதல் புரியவில்லையா ?
கூடிக் கழிக்கும் கிளிகளே
என் கோலம் தெரியவில்லையா ?
எவ்வாறு அவளைச் சேர்வேன்
ஓர் உபாயம் கூற மாட்டீரோ?

அஷ்றப் அலி


எழுதியவர் : ala ali (24-Nov-19, 11:07 am)
Tanglish : vaa kiliye vaa
பார்வை : 303

மேலே