கனவுகள் புதிது

கனவுகள் புதிது !

கண்களில் கவிதையை எழுதிவைத்தாய் ! – உனைக்
கண்டதும் காதல் கொண்டுவிட்டேன் !

மண்ணில் உதித்த முழுநிலவே ! – எவர்
மங்கையென் றுனக்குப் பெயர்கொடுத்தார் ?

உன்விழிப் பார்வையால் உயிர்கொடுத்தாய் ! – என்
உள்ளத்தில் பிறந்தது காதலடி !.

உன்வழி என்னை இழுத்ததென்ன ?
என்வழி எனக்கே மறந்ததடி !

கண்களைக் கண்களால் சிறையெடுத்தாய் ! - மனம்
காதலில் வேதனை கொள்ளுதடி !

கண்களில் உறக்கம் இழந்துவிட்டேன் ! - நான்
கனவுகள் மட்டும் புதிது கண்டேன் !.

எழுதியவர் : கவி இராசன் (25-Nov-19, 12:01 am)
பார்வை : 320

மேலே