நீ கண்ணால் வேர்க்காதே

அவள் தந்து போன சாபம்
வந்து போனதோ !!!
இல்லை கண்கள் பேசும் மௌனம்
என்னை கொன்று சென்றதோ

உள்ளம் உருகும்
உயிரும் உருகும்
கண்கள் கண்டே
கவிதை தோணும்

பாமரனும் இதில் தேர்வான்
பரமனும் தோற்று போவான்
உள்ளம் பார்த்து உதித்த காதல்
ஒருநாளும் தோற்காதே

நீ கண்ணால் வேர்க்காதே
என் நெஞ்சம் தாங்காதே

தினம் தினம் கவிதை
தினம் தினம் கனவு
எல்லா நாளும் எனக்குள் ஊரும்
ஒவவொரு கவிதையும் முதல் முறையே

எழுதியவர் : ருத்ரன் (28-Nov-19, 5:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 256

மேலே