நேர்கொண்ட பார்வையில்

நல்லது நடக்க சூளுரைபோம்
நலம் கண்டு வாழ நாமிருப்போம்
என்றுதான் கண்டுதான்
கனவிலும் நினைவிலும் கலங்காது
நின்றதும் வாழ்ந்ததும் அந்தக் காலம்,

இன்றுதான் என்னதான் மாறுமோ/
என ஏங்கித் தான் வாழ்க்கையில்
விடியலோ இரவோ தமிழன் பார்வையில்,
நடப்பது நடக்கட்டும் பார்ப்போம் ஒருகை
வலுத்தது வலித்தது மனதினில் எண்ணங்கள்
தமிழ் பெற்ற பிள்ளையவன் தனித்து நின்றாலும்
அவன் படை கொண்டவனே என்பது
பாரினில் பலரும் அறிந்ததே ,

ஆட்சியும் காட்சியும் மாறுது அங்கே
ஆனாலும் அறம் கண்ட நம் இனம்
புறம் கண்டு ஓடாது நெஞ்சம் நிமிர்த்தி
நேர் கொண்ட பார்வையில் இன்றும் அங்கே
எங்கே தமிழ் வாழ்கிறதோ
அங்கே நீதியும் நேர்மையும் தழைத்தோங்கி
இங்கேயும் எங்கேயும் தமிழன்
இருக்கின்றான் என அச்சமற்ற எண்ணம்
எவ்வினத்தோர் என்றாலும் புரிந்திடும் உண்மை
விளங்கிடும் தமிழின் தாகமும் கொள்கையும்

எழுதியவர் : பாத்திமாமலர் (29-Nov-19, 11:17 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 232

மேலே