சோணம் - குறுங்கதை

மூத்த பொண்ணுப் பேரு சோணம். மூணு வருசம் கழிச்சு இரண்டாவதாப் பொறந்திருக்கிறதும் பொண்ணு. அதுங்க கல்யாணம் பண்ணற வயசு ஆனா நெறைய வரதட்சணை குடுக்க மாப்பிளாளைப் பசங்க வரிசை கட்டி நிப்பாங்க.
@@@@@
என்னடா சொல்லற இருளாண்டி?
@@@@@
ஆமாம்மா. ஆயிரம் ஆம்பளப் பசங்க பொறந்தா, பொம்பளக் கொழந்தைங்க தொளாயிரம் பேருதான் பொறக்கறாங்கன்னு அன்னைக்கு செய்தில சொன்னாங்க. இன்னும் இருவது வருசம் கழிச்சு ஆயிரம் பசங்க கலியாண வயசை அடையபோது கலியாணம் பண்ணற வயசில தொளாயிரம் பொண்ணுங்கதான் இருப்பாங்களாம். நாடு முழுக்க லட்சக்கணக்கான பசங்க பொண்ணு கெடைக்காம வரதட்சணையை மூட்டை மூட்டையாத் தூக்கிட்டு அலையப்போறானாக. எம் பொண்ணுங்க ரண்டும் எனக்கும் மனைவி மருதாயிக்கும் சொக்கத் தங்கம்மா?
@@@###
சந்தோசம்டா மவனே இருளாண்டி.
@@@@@
மொதப் பொண்ணு மாதிரியே ஒரு பேரை ரண்டாவது பொண்ணுக்கும் வைக்கணும்.
'சனம்'ங்கற பேருதான் இருக்குது. 'சா'ங்கிற எழுத்தில பேரு ஆரம்பிச்சு 'ணம்'னு முடிஞ்சா நல்லா இருக்கும். அதான் கொழப்பமா இருக்குதம்மா.
@@@@@!
மூத்த பொண்ணுப் பேரு இந்திப்பேரு. தமிழ்ப் பேரை வச்சாக் கேவலம்னு நம்ம சனங்க நெனைக்கிறது உண்மைதான்டா மவனே. நம்ம ஊரு கெராமத்தில கொள்ளுப்பாட்டனகாலத்துக்கு முன்னாடி இருந்தே புள்ளைங்களுக்கு இந்திப் பேரை வைக்கிறதலதான் நெறைய சனங்க ஆருவம் காட்டினாங்க. உம் பேரு உந் தாத்தன் பேரு. நீ ஒண்ணு செய்யுடா இருளாண்டி.
@@#@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@@
ரண்டாவது பொண்ணுக்கு 'சாணம்'னு பேரு வையுடா.
@@@@@@
படிச்சவங்கதான் 'சாணி'யை 'சாணம்'னு சொல்லறாங்க. அந்தப் பேரை வச்சா நம்ம சனங்க கிண்டல் பண்ணுவாங்களே.
@@@@@@
'சாணம்'ங்கிறது தமிழ்ப் பேரு இல்ல. இந்திப்பேருன்னு சொல்லிடு. எல்லாரும் '"சாணம்' அருமைமான சுவீட்டு நேமு"ன்னு சொல்லுவாங்க. உன்னப் பாராட்டுவாங்கடா.
@@@@@@
நீ சொல்லறதும் சரிதாம்மா. நாளைக்கு மருதாயியையும் கொழந்தையையும் ஆசுப்பத்திரில இருந்து கூட்டிட்டு வர்றேன். குலதெய்வத்துக்கு பூசை பண்ணீட்டு கொழந்தை காதுல மெதுவா மூணு தடவை 'சாணம், சாணம், சாணம்'னு சொல்லிடும்மா.
@@@@@@@
சரிடா மவனே இருளாண்டி.
@@@@@@@@@@@@@###@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Sonam = beautiful.. Unisex name.
Sanam = beloved. Iranian origin. Unisex name.

எழுதியவர் : மலர் (29-Nov-19, 10:03 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 153

மேலே