நீதான் எனக்கு வேண்டுமடி

கட்டற்று கிடக்கிறதே கவர்ச்சியவள் உடலெங்கும்
முட்டைக் கண்ணழகு முத்தொளிரும் பல்லழகு
வட்டநிலா முகத்தழகு வண்ணமயில் உடலழகு
பட்டைச் சரக்கின்றி பதறும் குடிமகன்
தொட்டவுடன் போதைவரும் தேவதைநீ மதுக்கிண்ணம்
இட்டமுடன் என்னோடு எந்நாளும் வேண்டுமடி
கட்டவிழ்ந்த வெள்ளமாக காளைமனம் தவிக்குதடி
கிட்டவந்து என்னோடு கிள்ளைமொழி கூறாயோ
எட்டும்வரை வாழ்வினிலே இன்பமாய் வாழ்வோமே!

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (30-Nov-19, 12:58 pm)
பார்வை : 398

மேலே