பழமொழியும் அதன் உண்மையான கருத்தும் --2

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது ..

இந்த பழமொழியை நாம் நிறைய முறை கேட்டிருக்கிறோம் நம் என்ற வாழ்க்கையில் பல்வேறு சூழநிலைகளில் அன்றாடவாழ்க்கையில் .
இதன் சரியான பொருள் என்ன ..
நம் முன்னோர்கள் தவறாக சொல்லி இருப்பார்களா ?

இல்லை ,நம் முன்னோர்கள் சொன்னது சரிதான் ..நாம் தான் திரித்து கூறி வைத்திருக்கிறோம் காலப்போக்கில் .

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது --இதுதான் இன்று வழக்கில் இருக்கும் சொலவடை .

நாய் ,பூனை ,சிங்கம் போன்ற விலங்குகள் போன்ற பாலூட்டிகள் குட்டிகளை ஈன்ற வுடன் தனக்கு ஏற்படும் பிரசவ வலி மற்றும் கடும் பசியின் காரணமாக தான் முதலில் ஈன்ற குட்டியை தின்றுவிடம் . இந்த செயல் தவற எண்ணப் படுவதில்லை இயற்கை சூழலில் .

அனால் புலி இதற்க்கு விதிவிலக்கு . தன பேறு காலத்தில் தன குட்டியை தின்பதில்லை .இயற்கையாகவே தன பேறு கால வலி மற்றும் கடும் பசியை சரிசெய்து கொள்கிறது .

உண்மையான பழமொழி இதோ

புலி பசித்தாலும் புள்ளையை திண்ணாது ..

இந்த பழமொழிதான் நாளடைவில் தடம் மாறி " புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்று மருவி விட்டது ..

இனியாவது நாம் இந்த பழமொழி யை சரியாக பயன்படுத்துவோம் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (1-Dec-19, 8:37 am)
பார்வை : 118

மேலே