ழ கரம் -- தமிழின் சிறப்பு

"ழ'கரம் - இது தமிழ் மொழியின் தனி சிறப்பு . ழகரம் தமிழ் தவிர தமிழி தவிர தமிழின் வழித்தோன்றலான மலையாளத்தில் மட்டும் பார்க்கமுடியும் . இன்னும் சொல்ல போனால் மலையாளம் எனது மலையாழம் என்று தான் இருந்தது . அதுவும் காலப்போக்கில் மருவி மலையாளம் என்று மருவி விட்டது .

ழகரம் தமிழின் சிறப்பு . திருஞான சம்பந்தர் சீர்காழி பெருமான் மீது பாடிய திருப்பதிகம் ஒன்றின் பத்தாவது பாடலில் அதாவது ஒரே செய்யுளில் 19 முறையும் 12 செய்யுளில் 22 முறையும் ழகரம் பயன் படுத்தி இருப்பார் .

பாடல் :

பாழி யுரை வேழநிகர் பாழ மணர்
குழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி
ஏழையவள் வாழுமிறை வாழுமிடமாங்
கீழிசை கொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனும்க் காழியசில்
காலிசெய் வேழுலகில் ஊழிவளர்
காழிநகரே "

பொருள் :

பாழிகளில் தாங்கும் சமணர்களும் புத்தர்களும் உணராத பெருமான் ,யாழின் Isai போல் பேசும் உமாதேவியுடன் உறையும் பதியாவது கீழுலகும் மேலுலகும் அஞ்சுமாறு செய்த காளியானவள் அக்குற்றம் நீங்க பூஜை செய்த காழியப் பதிவாகும் .

பாடல் :

ஒழுகலரி தாழ்கலியில் ஊழியுலகு
பழிபெருகு வழியை நினையா
முழுதுடலில் ஏழுமயிர்கள்
தழுவுமுனி குழுவினொடு
கெழுவு சிவனைத்
தொழுதுவுலகில் இழுகுமலம்
அழியும்வகை கழுவுமுரை
கழுமல நகர்ப் பழுதிலிறை
எழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே "

பொருள் :

அறம் அழிந்துகொண்டே வரும் கலியுகத்தில் வரும் அரவழியைப் பின்பற்றுவது கடினமாகிவிடவே உடல் முழுவதும் உரோமங்கள் கொண்ட உரோமச முனிவர் தம் கூட்டத்துடன் வந்து மலம் (பாசங்கள் ) நீங்குமாறு வழிப்பட்டது கழுமலைப் பதி (சீர்காழி ) ஆகும் .

எவ்வளவு அருமை தமிழ் மொழி பாருங்கள் .

நன்றி திருப்பூர் சுகுணாதேவி .

எழுதியவர் : வசிகரன்.க (1-Dec-19, 9:14 am)
பார்வை : 592

சிறந்த கட்டுரைகள்

மேலே