தமிழ் மொழியும் உயிர் எழுத்துகளும் அதன் ஒலியும் அதன் உணர்வுகளும்

தமிழ் மொழிக்குத்தான் எத்தனை எத்தனை சிறப்புக்கள் . பழமையான மொழி மட்டும் அல்ல சுகமான இதமான பல வளங்களும் , சுகங்களும் அழகையும் நிறைந்த மொழி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

தமிழ் உயிர் எழுத்துக்களும் அதை நாம் உச்சரிக்கும் முறை மற்றும் அது நமக்கு கொடுக்கும் உணர்வு எவ்வளவு இதமானது . எவ்வளவு உணர்ச்சி பூர்வமானது . ஒரு மொழி வளம் பெற்று செறிவு பெற்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ வேண்டுமானால் அந்த மொழி எளிமையாக , செறிவு பெற்றதாக இலக்கண இலக்கிய வளம் பெற்றதாக இருக்கவேண்டும் . அப்படி இல்லை என்ற அந்த மொழி இறப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

தமிழ் உயிர் எழுத்த்துக்களின் ஒலி மற்றும் அதன் உணர்வுகளை கீழே கொடுத்து உள்ளேன் . நீங்களே சுவைத்து உணருங்கள் .

அ ஆ -- உணர்த்தும் உணர்வு -- வலி ,உடல் நோவை உணர்த்துவது


இ ஈ -- சிரிப்பு , நகை உணர்வு


உ ஊ -- காரம் , அறுசுவையில் ஒரு சுவை . இந்த எழுத்துகள் உணர்த்துகின்றன .

எ ஏ -- சினம் , கோபம் --ஒருவகை உடல் உணர்ச்சியை வெளிப்படுத்த உதவும் எழுத்துகள்

ஐ -- வெட்கம் -- ஒருகை உடல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒற்றை எழுத்து . மனித தன்னை அறியாமல் அந்தந்த சூழ்நிலைகளில் வெளிப்படுத்தியும் உடற் கூறு மொழிகள் .

ஓ ,ஒ -- ஆச்சர்யம் --செய்யமுடியாததாக எண்ணும் ஒரு செயலை அல்லது வினையை செய்து முடித்து கொட்டும் போது வெளிப்படும் உணர்ச்சி .

ஓள -- வக்கணை --செறிவுற்ற செயல் , உணாச்சி பேருக்கு வெளிப்பாடும் செயல் .

அக் --விக்கல் -- உண்ணும் போது காற்று புகுந்து உண்டாகும் ஒரு வித ஓசை . இயற்கையாக ஏற்படுவது .

இயர்கையாக உருவான மொழி என்றல் அது தமிழகத்தான் இருக்கமுடியும் என்பதற்கு இது ஒரு சான்று .

உணர்வுகளால் ஏற்பட்ட மொழி , தாங்க உண்டானது .இறைவன் தனக்காக ஏற்படுத்திய மொழி இதுதான் .

எழுதியவர் : வசிகரன்.க (1-Dec-19, 10:24 am)
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே