சில சிவஞான உண்மைகள் மற்றும் தத்துவங்கள் --1

சில சிவஞான தத்துவங்கள் மற்றும் உண்மைகள் இதோ உங்களுக்காக ..

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு :

நாச மார்க்கம் --- இறைவனை முதலாளியாக எண்ணி சேவை செய்தல்

சத்புத்ர மார்க்கம் -- இறைவனை தாய் தந்தையாக எண்ணுதல் .

சக மார்க்கம் --இறைவனை நண்பனாக எண்ணுதல்

சன் மார்க்கம் -- இறைவனை குருவாக எண்ணுதல்

முக்திநிலைகள் நான்கு :

சாலோகம் -- சிவலோகம் சென்று சிவ தொண்டு செய்தல்

சாமீபம் -- சிவனுக்கு அருகே இருந்து அணுக்க தொண்டு செய்தல்

சாருபம் -- சிவனுக்கு பயன்படும் உருவமாகி தொண்டு புரிதல்

சாயுச்சியம் --இறைவனோடு இரண்டற கலந்து இன்பத்தை அனுபவித்தல்

சைவ நெறிகள் (படி நிலைகள் ) நான்கு :

சரியை : இறைவன் உருவ திருமேனிகளை புறத்தே வணங்கி சிவாலயத்திற்கும் சிவ னடியார்க்கும் தொண்டு செய்தல்
முக்தி -- சாலோகம்

கிரியை : இறைவனது அருவுருவத் திருமேனியை அகத்தும் புறத்தும் பூசித்தல்.
முக்தி : சாமிபம்

யோகம் : சிவனை அகத்தே பூசித்தல்
முக்தி -- சாரூபம்

ஞானம் : முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களை கேட்டு சிந்தித்து தெளிந்து நிட்டை கூடுதல்
முக்தி -- சாயுச்சியம்

நம்முடல் எதற்க்காக நமக்கு கொடுக்கப் பட்டுள்ளது ..

தலை -- சிவனை வணங்க

கண் --நமக்காக நஞ்சுண்டவரை பார்க்க

செவி -- சிவனின் பண்புகளையும் செயல்களையும் கேட்க

மூக்கு --முக்கண்ணனை போற்றி ஒலிக்க

வாய் -- சிவபெருமானை எப்போதும் வாழ்த்த

நெஞ்சு -- செஞ்சடையானை எப்போதும் நினைக்க

கால்கள் --அரன் கோவிலை வளம் வர

கைகள் -- இறைவனை வணங்கி தொழ

ஆக்கை --கோவிலில் வலம் வந்து பூக்களை சமர்ப்பிக்க

விளக்க விளக்க இன்னும் விளக்கம் வரும் .

எழுதியவர் : வசிகரன்.க (1-Dec-19, 10:56 am)
பார்வை : 156

மேலே