மருத்துவ வெண்பா – அறுகீரை – பாடல் 43

நேரிசை வெண்பா
(’ய்’ ஆசிடையிட்ட எதுகை)

கா’ய்’ச்சல் குளிர்சந்நி காணுங் கபநோயும்
வா’ய்’ச்ச கறியாய் வழங்குங்காண் – வீச்சாய்க்
கறுவுமோ வாயுனங் காமமிக வுண்டாம்
அறுகீரை யைத்தின் றறி. 41

குணம்: பல பிணிகளுக்கும் நற்கறியான அறுகீரையினால் சுரம், நடுக்கம், சன்னிபாதம், கபரோகம், வாத நோய் இவைகள் போகும்.தாதுவிர்த்தி உண்டாகும்.

உபயோகிக்கும் முறை: இக்கீரையை நன்றாயலம்பி பாகப்படி சமைத்துண்ண மேலே கூறப்பட்ட குணங்கள் ஏற்படும். இது சாதாரணமாக உஷ்ண தேகிகளுக்கு ஆகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-19, 12:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே