மனிதன் மனிதன் மனிதன்

எட்டிப் பறிக்க நினைப்பதும் தேவை என்பதாலே,
கொட்டிக் கவிழ்ப்பதும் கெடுதல் செய்யும் நினைப்பாலே,
கட்டிக் காப்பதும் நமதென்ற வேகத்தாலே,
முட்டிப் பார்ப்பதும் கிடைத்துவிடும் ஆசையாலே.

ஆசைப்படுவது வாழ்வியல் இயற்கை,
வசப்படுத்துவது அத்தனவன் தரும் பார்வை,
நிலைப்பது என்பது முறையான வாழ்க்கை,
நிம்மதி பெறுவது புண்ணியங்களின் சேர்க்கை.

இருப்போருக்கும் பிரச்சினை,
இல்லாதோருக்கும் பிரச்சினை,
இவையாவும் மனத்திடை சேர்ந்திடும் சினை.
நினைப்பதனை இயல்பாய் கொண்டால்,
மாறி விடும் வாழ்வு நோக்கும் வினை.

தொங்குவது நிலவென்றும்,
தொட்டுவிடும் தூரமே வானம்,
என்றும் நினைப்பது பேதமையே!

இல்லாததை நினைத்து ஏங்குவதும்,
இருப்பதை இல்லையென்று நினைப்பதும் ,
நிலையில்லா மனதின் நிலைப்பாடே!

எழுதியவர் : arsm1952 (3-Dec-19, 4:52 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 158

மேலே