தங்கம் அவள் தங்கம்

தங்கம் விற்கும் விலையில் என்
தங்கத்திற்கு ஒரு குந்துமணி தங்கம்
வாங்கக் கூட வக்கில்லா என்னையே நான்
நொந்து கொண்டிருக்க தங்கமவள்
உந்தன் அன்பு ஒன்றே போதும் அன்பே
என்னை உயிர் உள்ளளவும் வாழவைக்க
என்றால் என் நெஞ்சம் குளிர பின்
புன்னகைத்தாள் அந்த புன்னகையில்
அவள் உண்மை அன்பைக்கண்டேன்
ஓர் ஆயிரம் பவுன் தங்க நகையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Dec-19, 7:54 pm)
பார்வை : 194

மேலே