அர்ச்சனைகள்

எத்தனை அர்ச்சனைகள்
எத்தனை அர்ச்சனைகள்
சொல் பேச்சு கேளாமைக்கு
அன்னையிட்ட அர்ச்சனைகள்
சொல்லாத பேச்சுக்கு
தந்தையிட்ட அர்ச்சனைகள்
கேலி பேச்சுக்கு
தமக்கைகளிட்ட அர்ச்சனைகள்
சொன்னதை செய்யாதற்கு
மனைவிடம் அர்ச்சனைகள்
சொல்லாமல் செய்த செய்கைகளுக்கு
நண்பர்களிட்ட அர்ச்சனைகள்
கல்லாகியும்
கலங்கியும்
கலக்கியும்
கலங்கியவர் கண்டு
புளாங்கிதம் கொண்டும்
காலந்தோறும் அர்ச்சனையுடன் ...

- செல்வா

எழுதியவர் : செல்வா (3-Dec-19, 8:24 pm)
சேர்த்தது : செல்வா
பார்வை : 62

மேலே