இயற்கை

கொடுக்கும் தெய்வம் கூரையைப்
பிய்த்துக்கொண்டு கொடுக்காதோ
என்று கேட்டான் ஒருவன்.... தெய்வமும்
கொடுத்தது.... அவனுக்கோ அதை
எப்படி சேமித்து வைப்பது என்று தெரியாது
விரயமாகி.... மீண்டும் தெய்வத்தை நாடுவதுபோல்
காய்ந்த நிலத்தை, நனைக்க, தாகத்தில்
வாடும் நாவிற்கு ..... நீர் வேண்டி வானை நோக்கி
வேண்டினான் மழைக்காய் மனிதன்...
வானைப்பிய்த்துக்கொண்டு அடித்தது மழை
பெய்யும் மழை நீரை சேமித்துவைக்க
வழியேதும் சரியாக இவன் செய்துகொள்ளவில்லை
மழை நீர் வெள்ளமாய் மாறியது இவன் வருந்த
போதுமடா சாமி இந்த மழை என்கிறான் இப்போது

இது யார் அறியாமை... யார் குற்றம்
இயற்கையின் குற்றம் நிச்சயம் இல்லை
கொடுக்கும் தெய்வத்தை நிந்திக்காதே
வந்திக்காது போயினும் ...
இயற்கையை புரிந்துகொண்டால் இயற்கையே
இதற்கொரு தீர்வு சொல்லும் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-19, 9:02 pm)
Tanglish : iyarkai
பார்வை : 293

மேலே