முகவரி இல்லாத கடிதம்

முகவரி இல்லாத கடிதம்
============================================ருத்ரா


பூவின் முகவரி

வண்டுக்கு தெரியும்.

புயலின் முகவரி

புல்லிலும் படரும்.

உன் சொல்லுக்கு

முகவரி என்ன?

உன் பார்வை என்றது

அச்சொல்லும்.

பார்த்து பார்த்து

உன்னை

மீண்டும் மீண்டும்

பார்த்துக்கொண்டு தான்

இருக்கின்றேன்.

முகம் மட்டுமே

தெரிகின்றது.

எங்கே முகவரி?முகவரியா கேட்கின்றாய்?

மூழ்கிப்பார்

உன் இதயத்துள்.

அந்த துடிப்புகள் சொல்லும்

என் முகவரியை.என் இதயமே

கடிதம் ஆனால்

முகவரியை நான்

எங்கு எழுதுவது?இதோ அந்த முகவரி

என்று

ஒரு மின்னல் புன்னகை

காட்டி மறைந்தாள்.

அவள் இதயம் எழுதிக்காட்டிய‌தில்

எழுத்தும் இல்லை.

வரியும் இல்லை.


இருப்பினும்

காதல் பட்டணத்திற்கு

அனுப்பினேன்

நான்

முகவரி இல்லாத கடிதம்

ஒன்றை.=======================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (4-Dec-19, 12:23 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 102

மேலே