மழை ஓய்ந்து விட்டது

மழை ஓய்ந்து விட்டது

சாரலில் நனைந்த
சன்னல் கம்பிகளில்
மிச்சம் இருந்த
நீர்த்துளிகள்
தொட்டு தொட்டு நடை
சென்று
ஒற்றை வரியாய்
விழுகிறது

ஈர சுவர்கள்
என் முதுகு உரச
ஜில் என ஊறிடும்
இன்ப உணர்வு

சுட சுட உண்பதற்கு
எது கிடைக்கும்
ஏங்கிடும் உள்ளம்.

மழை ஓய்ந்து விட்ட்து
மனம் மட்டும்
இன்னும் ஈரமாய்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Dec-19, 1:14 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 169

மேலே