அழகே வா என்னோடு

கட்டு உடலழகி கனிவான சிரிப்பழகி
பொட்டு முகத்தழகி பொன்போன்ற நிறத்தழகி
பட்டுத் தெறிக்கும் பால் நிலாவாய் உந்தன்
வட்ட முகத்தினிலே வசீகரம் மின்னுதடி
தட்டு வழியும் தழதழ கனிகள் போல்
எண்ணும் போதினில் எந்நாளும் இனிக்கின்றாய்
முட்டும் காளையாய் முறுக்கும் மனசு உனை
எட்டும் திசைஎலாம் எடுத்துண்ண நினைக்குதடி
கிட்ட வந்து காதினிலே சம்மதத்தை கூறாயோ
பிட்டும் தேங்காய் போல் பிணைந்தே கிடந்திடலாம்
கிட்டும் வரை ஒன்றாய் வாழ்வை ரசித்திடலாம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Dec-19, 1:51 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhage vaa ennodu
பார்வை : 310

மேலே