அந்தி அழகுடன் கைகோர்த்து நடக்கும்

இது இளவேனில் காலம்
இளமலர்கள் காற்றினில் ஆடும்
இதயங்கள் காதலில் நனையும்
மொழியற்ற மௌனம்
நெஞ்சில் நீரோடையாக சலனிக்கும்
மாலையின் மௌன கீதம்
அந்தி அழகுடன் கைகோர்த்து நடக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-19, 7:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 80

மேலே