அவள் அழகு

உதய சூரியனின் கிரணங்கள் வருட
உயிர்துடிப்புக்கொண்டு அலரும் கமலம் நீ
இரவில் இந்துவின் குளிர் கிரணங்கள் பட்டு
சிரித்தே மலரும் அல்லியும் நீ -இப்படி
காலையும் மாலையுமானாயடி நீ
சோலைக்குயிலின் இனிமை கீதமடி நீ
பச்சைக்கிளியின் கிள்ளை மொழியடி நீ
துள்ளிவிழும் அருவியின் ஓசையடி நீ
நடந்துவரும் நதியின் அழகும் நீ
மரங்களின் பசுமையில் நீ
சோலையின் மலரும் மலரெல்லாம் நீ
இயற்கையாய் நீ யானாய்
எழிலிநீ என் காதலி இதனால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Dec-19, 10:08 pm)
Tanglish : aval alagu
பார்வை : 177

மேலே