சொல்ல தெரியவில்லை

அவள் அப்படி
சொல்லிக்கொள்ளும்
அளவிற்கு அழகில்லை
ஆனாலும் காத்திருக்கிறேன்
அவளின் தரிசனத்திற்காக...

அவளின்
உடையலங்காரத்தில்
ஒரு அலட்சியம்
ஆனாலும் என் கண்களுக்கு
ஜவுளிக்கடை பொம்மையாய் தெரிகிறாள்..

அவள் கொஞ்சம்
சுமாரான உயரம்
ஆனாலும் என் பக்கத்தில்
நின்றால் ஜோடி அழகாக பொருந்தும்...

அவள்
போகுமிடமெல்லாம்
அவளை தொடர்ந்து போனாலும்
எனை வித்தியாசமாய்
பார்க்காத அவள் கொஞ்சம் வித்தியாசமானவள்...

பிரம்மனை
ஒரு கவிஞன் என்பேன்
இப்படி ஓரு நடமாடும் கவிதையை படைத்ததால்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Dec-19, 7:42 am)
Tanglish : solla theriyavillai
பார்வை : 341

மேலே