எதிர்பார்ப்பு

ஏதும் என்கையில் இல்லை
என்றும் அறிந்தும்
ஏனோ என்னில்
என்றும் எழும் ...
பற்றுதலின் பாங்கில்
ஏங்கும் ஏக்கம்
ஏனோ
எப்போதும் எதிர்கொண்டு
ஏமாற்றங்கள் பலகொண்டும்...
உந்தும் உள்ளூர
இயல்பாக இயக்கும் எனை..
எந்தன் எதிர்பார்ப்பு

- செல்வா

எழுதியவர் : செல்வா (5-Dec-19, 10:02 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : edhirpaarppu
பார்வை : 173

மேலே