இயற்கை

நிறங்களின் மீது இயற்கைக்கு
ஓர் அலாதி ஆசை போலும்
அப்போதுக்கு அப்போது வானில்
ஏழு நிறம்கொண்ட வானவில் படைத்து
அதைப் பார்த்து அனுபவிக்க ....

பறக்கும் பறவைகளுக்கு ...
வண்ண வண்ண சிறகுகள் தந்து
அந்த வண்ணத்தில் இயற்கைக்கு
அத்துணை ஈடுபாடு போலும்
ஆடும் மயிலுக்கு அழகு நீல கழுத்து
அதன் தொகை அத்தனையும்
நிறத்தால் கூடிய அழகு ....
அதை ஆடவைத்து அழகு பார்க்கும் இயற்கை

நீல நிறம் வானுக்கு , கடலுக்கும்
நீல வானில் மிதந்துவரும்
நிலவோ வெள்ளிநிறம் ........
அழகு பார்க்கும் இயற்கை அன்னை


நதியின் கரையினில் ஓர் அழகிய தோட்டம்
அங்கு கமுகு வாழை பலா என்று
பல பல பல மரங்கள்......
வாழை ஈன்றது, செவ்வாழை, பச்சை வாழை
மஞ்சள் வாழை என்ற பல குலைகள்...
கண்ணுக்கு குளிர்ச்சி மனதிற்கு இதம்
நான் அனுபவிப்பதைப் பார்த்து
ரசிக்கின்றாளோ இயற்கை அன்னை !

விலங்குகளுக்கு பல நிறம்
புலிக்கோர் நிறம், சிங்கத்திற்கு வேறொன்று
குரங்குகளின் பல நிறம், ஏன்
நம்மை படைத்த இறைவன்
நமக்குள் எத்தனை நிறம் வைத்தான்...!
மஞ்சள் நிறத்தில், சிவப்பாய் பரங்கிக்காய்போல்
சிலர், வெள்ளையாய் சிலர், வெளிர்
நிறத்தில் சிலர்..... கருப்பாய் பலர்
இப்படி பல்வேறு நிறத்தில் நம்மில்
நிறபேதம் கண்டு ரசிக்கும் இயற்கை அன்னை!

நிறங்களால் மனிதா, உன்னை என்றுமே
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நினைத்திடாதே
இயற்கை நிறங்களில் இன்பமே காண்கிறாள்
படைத்திட்ட தன் படைப்புகளில் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Dec-19, 4:06 pm)
Tanglish : iyarkai
பார்வை : 285

மேலே