ஒரு கைப்பேசி பேசுகிறது
இப்படி இவள் ஒரு வினாடி கூட
விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாளே
தெரிந்து கொண்டேன் அவள்
தன் காதலனோடுதான் பேசிக்கொண்டிருக்கிறாள்...
பேசட்டும் அது அவள் உரிமை, அவள் விருப்பம்
ஆனால் என்னை ஏன் இப்படி வதைக்கின்றாள்...
தன் காதில் காதோடு என்னைதைத்துவிட்டாளோ
தெரியலையே........
ஐயோ..... சாலைக்கு வந்தும் இவள்
போக்குவரத்தை சற்றும் சட்டை செய்யாது
பேசிக்கொண்டிருக்கிறாள்......
எனக்கு இப்போ பயம் ......
இவள் யார்மீதாவது.... இல்லை
வரும் கார், பஸ் மீது மோதிவிடுவாளோ!
இறைவா.... எனக்கென்று ஒரு 'இடைவெளி'
....... 'space' .... தேவை .. கிடைக்குமா ...
ஐயோ.... ஐயோ....ஏன் நாவே
ennenben உன்னை........
அதோ அவன் ...... ஸ்கூட்டர் இவள் மீது
மோத.... கீழே விழுந்தாள் இவள்....
அவனும் தூக்கி எறியப்பட.... ஹெல்மெட்
அவனைக் காப்பாற்றியது....
அவள்....... கை. காலில் அடி....
எழுந்துவிட்டாள்......
இப்போது சாலையில் சிலர் சூழ அவன்
ஒன்றும் இல்லை.... கை, காலில் 'கீறல்' என்கிறான்
கூட்டம் கலைய.......
அவள் இப்போது அவனை நோக்கி
மெல்ல நடந்தாள்.... இருவரும்
ஒருவரை ஒருவர் தழுவ....... புரிந்துகொண்டேன்
அவள் என்னைகாதோடு தைத்ததுபோல்
வைத்துக்கொண்டு பேசிய காதலன் அவனே ..
இப்போது அவள்' என்னைத்தேடுகிறாள்....
அவள் கைப்பேசி.......
'இடைவெளி' தேடிய நான்.... நான்'
இதோ தெருவோரம் சிதைந்து கிடக்கிறேன்
இதோ என்னை இப்போதும் விடவில்லை
அவள் சிதைந்த என்னைப் பொருக்கி
சேர்க்கப்பார்கிறாள்.......
இறைவா..... இறைவா''''
எப்போது எனக்கு சுதந்திரம்....!!!!!!!!!!!!!!!!