மரணம் வெல்வோம்

எதுவும் இங்கு
நடக்கும் -நீ துணிந்தால்
எல்லாம் இங்கு
கிடைக்கும் ..👍

தர்மம் ஓர் நாள்
வெல்லும்
பிறர் கண்ணீர்
நீ துடைத்தால்
தலைவன் என ஊர் சொல்லும் ..!!🙏

புகழ் உன்னைக்
கொண்டாடும், சில சமயம்
பிறர் இகழ்ச்சியில் உன் மனம்
திண்டாடும் ….😨

தாமரை இலை மேல்
நீர் துளியாய் இருந்துவிட்டால்
எதையும் சமமாக
நோக்கும் பக்குவம் பிறக்கும்..!! 🤝

எல்லாம் இங்கு
காற்றில் நகரும்
மேகமாய் கடந்துபோக,
வெறும் நினைவுகள்
மட்டுமே எண்ணத்தில்
உறவாடும்….
இதை அறிந்து கொண்டால்
எதுவும் உன்னை
தாக்காது இருக்கும் -மனம் அது
ஏங்காத்து இருக்கும்...🙂

வாழும் நாட்கள்
நொடி பொழுதில் மாறலாம் ,
கண் முன் கண்ட உறவு
மறு கணம் மறையலாம்,
எல்லாம் இங்கு வெறும் மாயை
என உணரா உள்ளமே கலங்கும்..🙄

இறையருளை புறத்தில் தேடாமல்
அகத்தில் தேடி அலைந்தால்
முக்தி பெறலாம் …
முக்தி பெற்ற மனம்
அமைதி பெறும் ,
அமைதி கண்ட உள்ளம்
அனைவரிடமும் அன்பு கொள்ளும் ,
அன்பு கொண்ட நெஞ்சம்
மரணம் கடந்தும் அழியாது நிற்கும் ,
இப்புவியில் வரலாறு படைக்கும் 💪👍

மரணம் வெல்வோம் 👈

என்றும் ….என்றென்றும் …💐
ஜீவன்….✊✊

எழுதியவர் : ஜீவன்.. (5-Dec-19, 6:51 pm)
சேர்த்தது : Ever UR Jeevan...
Tanglish : maranam velvom
பார்வை : 92

மேலே