தோற்றுப் போகவே ஆசை

அன்னை தந்தையிடம் தோற்றுப் போகவே ஆசை
அவர்தம் ஆசிகள் என்னுள் என்றும் நிலைத்திருக்க…

அண்ணன் தம்பியிடம் தோற்றுப் போகவே ஆசை
உரமிட்ட பயிராய் உறவு வலுத்திருக்க…

உயிர்த்தோழியிடம் தோற்றுப் போகவே ஆசை
உயிருள்ளவரை அவளன்பை சுவாசித்திருக்க…

நண்பர்களிடம் தோற்றுப் போகவே ஆசை
உதிரத்தில் கலந்திட்ட நட்பணுக்களை நான் ரசிக்க…

குழந்தைகளிடம் தோற்றுப் போகவே ஆசை
குதூகலிக்கும் அவர்தம் மனம் மகிழ்ந்திருக்க…

இயற்கையிடம் தோற்றுப் போகவே ஆசை
இறுதியில் இயற்கையோடு இசைந்திருக்க…

எழுதியவர் : இராம்குமார்.ப (5-Dec-19, 10:08 pm)
சேர்த்தது : இராம்குமார்
பார்வை : 110

மேலே