கண்டுபிடிக்கவே முடியாத கடத்தல் மன்னன்

நகைச் சுவைக் கதை
கண்டு பிடிக்கவே முடியாத கடத்தல் மன்னன் !!

பலப் பல வருசங்களுக்கு முன்னாலே நம்ம ரஷ்யாவிலெ நடந்ததா வெச்சுக்குவம்!!
மகா கடுமையான கட்டுப் பாடுகள் இருந்தாலும் "கண்ணில் மண்ணைத் தூவும் கடத்தல் மன்னன் இருப்பான்!! அப்டீங்கரதக் காட்டரதுக்கு இத் வச்சுக்கலாம்!

அப்பவெல்லாம் ரஷ்யாவிலெ ஸ்டாலின் காலத்திலெ, குருஷேவ் காலத்திலெ ப்ரழ்ந்யெவ் காலத்திலெ எல்லா ஃபாக்டரியிலும் ஆபீசுகளிலயும் திருட்டுக்களத தடுக்கம்ணும்னு, எல்லாத்தையும் எப்பவும் அணுவணுவாச் செக் பண்ணுவாங்க, ஒவ்வொரு தொழிலாளியயும் மத்தவங்க யாரையும் துப்புரவாச் செக் பண்ணித்தான் பாக்ட்ரிக்கு உள்ரயோ வெளிலயோ வுடனும்ணு கடும்ம்மயா உத்தரவு இருந்துது.

எவ்வளவு கடும்ம்மைனா, ஒர்த்தன் ஒரு துக்குணியூண்டு பொருள ஃபேக்டரியில இருந்து கடத்தி மாட்டிக்கிட்டான்னா, அவன ஒடனெ சைபீரியாக்கு "ப்ரொமோசன்" குடுத்து அனுப்பர அளவுக்கு!!

இந்தக் கதயிலெ வர ஹீரோ கலஷ்நிக்கொவ், ஃப்ளோர் ஃபிட்டர். ஃபாக்டரிக்கி அவன் கன் டயத்டுக்கு வருவான்; கச்சிதமா ரூல்ஸ் படி வேலே செய்வான்; ஷிஃப்ட் முடிஞ்சா கம்முனு கெளம்பிடுவான், அவன் ஒவ்வொருநாளும் உள்ள போரப்ப வெளியிலெ இருக்கர ஒரு காலித் தள்ளுவண்டியெ உள்ர தள்ளீட்டுப் போயி கடசி பாக்கேஜ் ஃப்ளோர்ல உடுவான். சாயங்காலம் டூட்டி முடுஞ்சு வெளீலெ போரப்ப அவனொட ஊட்டூக்கு வேணும்னு அந்தத் வண்டி நெரயாக் களிவு வய்;க்கப்பில்லப் போட்டுத் தள்ளீட்டிப் போவான். அங்கெ, களிவு வய்க்கப் பில்ல ஆரு வேணாலும் கொண்டு போலாம்; அதுக்குத் தடை இல்லெ.ஆனாக்கா வெளிக் கேட்டில முச்சூடாச் செக் பண்ணுவாங்க.

அங்க நெரந்தரக் கேட் கீப்பரு, பீச்சியோவ் ரொம்பக் கரரான ஆளு; வாயத் தெரந்தெல்லாம் காட்டச் சொல்லுவான்.ரண்டு பேரும் ஒரே ஷிஃப்ட் ஆளுங்க; குவாட்டர்சிலெ பக்கத்துப் பக்கத்துப் புறாக்கூண்டுக் குடுத்தனக் காரங்க.

கலஷ்நிக்கொவ் தள்ளீட்டு வார வய்க்கப் பில்லு வண்டியக் கேட்கீப்பரு பீச்சியோவ். வண்டியக் கவுத்துப் பொரட்டிச் செக் பண்ணுவான்.ஒண்ணுமே வய்க்கப்பில்லுக்குள்ர இருந்ததில்லெ. ஆனாலும் அவனுக்குத் தாள முடியாத சந்தேகம்; "ஒர்த்தன் களிசடை வய்க்கப் பில்ல மெனக்கெட்டு வூட்டுக்குத் தெனமும் கொண்டுபோவானா?" அப்டீனு!!

இப்பிடியே கலஷ்நிக்கொவ். அவனொட சருவீசு காலம் முளுக்க வக்கிப்பில்லக் கொண்டு போய்ட்டே இருந்தான்; பீச்சியோவும் தெரிஞ்ச மட்டிலும் கலஷ்நிக்கொவ் கடத்தரதக் கண்டு புடிக்கத் தோதான நேரத்தப் பாத்துகிட்டே இருந்தான்.

ரண்டு பேரோட சருவீசு முடிஞ்ச அன்னிக்கிக் கடோசி நாளு கடோசி ஷிஃப்ட்டு. சம்பளப் பட்டுவாடா, கணக்கு வள்க்கு எல்லாம் முடிஞ்சு, ரிட்டேடு டீப்பார்ட்டி எல்லாம் முடிஞ்சு, ரண்டு பேரும் பேக்கேஜிங் ஃப்ளோர்லெ உக்காந்து பேசீட்டிருக்கராங்க, வூட்டுக்குப் போரத்துக்கு மிந்தி.

அன்னக்கிக் கடோசியா பீச்சியோவ், கலஷ்நிக்கொவ் கிட்ட கேக்கரான், "கல்ஷி, நீ இத்தினி காலமா வுடாமெ நம்ப ஃபாக்டரீல இர்ந்து தெனமும் என்னத்யோ கடத்தரது நல்லா என்னோட மனசுக்குத் தெரீதுப்பா. ஆனாக்கா, என்னோட சருவீசுக் காலம் முளுக்க நானும் என்னால ஆனமட்டும் பாத்தும் அது என்னான்னு கண்டுபுடிக்கவே முடீலெ!"

"இன்னக்கி ரண்டு பேரும் ரிட்டேடு ஆவரமில்லியா? உங்கிட்டயே கேட்டுர்ரன், இனிமெ ஒனக்கு உம்மயச் சொல்ரதிலெ கஸ்ட்டம் இல்லேல்லெ? இப்பவாச்சும் சொல்ரயா?"அப்டீங்கரான்.

"சைபீரியாப் ப்ரமோசன் வாய்ப்பு" இனிமேலும் உம்மெ தெரிஞ்சாக்கா வந்தாலும் வரும்ங்கரத நெனச்சு அரண்டு போன கலஷ்நிக்கோவ் கம்முனு இருக்கரான்; பின்னாடி தன்ன மாதிரியெ வய்க்கப்பில்லு எடுத்துட்டு இருக்கரவனப் பாத்து நடுங்கரான்.

பீச்சியோவ், "அட! சும்மா சொல்லுப்பா! பின்னாடி இருக்கரவன் எம்மவந்தான்! பயப்படாமெச் சொல்லுப்பா! முப்பது முப்பத்தஞ்சு வருசமா என்னத்தத்தாம்பா வுடாமக் கடத்துனெ?"

"ரிட்டேடு ஆன பொரகும் இது என்னான்னு தெரிஞ்சுக்காட்டா எனக்கு மிச்சக் காலம் நிம்மதியாப் போகாதுப்பா!! சந்தேகத்திலெயெ செத்துருவன்; ப்ளீஸ் கல்ஷி!" அப்டீன்னு கெஞ்சரான்!!

கல்ஷி படு நெதானமாச் சொன்னான், "தினமும் ஒரு "தள்ளுவண்டி!

எழுதியவர் : செல்வப் ப்ரியா - - சந்திர (6-Dec-19, 11:12 am)
பார்வை : 119

மேலே