அவள் சிரிப்பு

அவள் சிரிப்பொலியின் அதிர்வலைகள்
மீட்டிய யாழின் ராக ஒலிஅலைபோல்
ஒலித்தனவோ இந்த சோலைப்பூக்களுக்கு
அதுவரை மொட்டாய் இருந்த பூக்கள்
அவள் சோலையை சுற்றிவருகையில்
என்னோடு பேசியபோது சிந்திய சிரிப்பில்
பொழுது விடிந்தது காலையாய் என்று எண்ணியோ
காலைப்பூக்கள் மாலையிலேயே மலர்ந்துவிட்டன!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Dec-19, 3:02 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 236

மேலே